#விவசாயம் என்பது தொழிலும் அல்ல கலாச்சாரமும் அல்ல. விவசாயம் என்பது வாழ்வியல் #save_jallikattu

Powered by Blogger.

Sunday, 3 May 2020

சூரியக் குடும்பம்

No comments :
கதிரவன்


Image result for சூரியன்கதிரவன் என்பது கதிரவ அமைப்பின் மையத்தில் உள்ள ஒரு விண்மீன் ஆகும். இதன் நிறை (332,900 புவி நிறைகள்) கதிரவ அமைப்பின் மொத்த நிறையில் 99.86 சதவிகிதத்தைக் கொண்டுள்ளது. இது தன் உள்ளகத்தில் இருக்கும் ஐட்ரசன் அணுக்களை ஈலியத்துடன் இணைப்பதன் மூலம் மாபெரும் ஆற்றலை வெளியிடுகிறது. அந்த ஆற்றல் பெரும்பாலும் மின்காந்த கதிர்வீச்சு மூலம் விண்வெளிக்குள் கதிர்வீசப்படுகிறது.
கதிரவன் என்பது ஒரு G-வகை முதன்மை வரிசை விண்மீன் ஆகும். +4.83 என்ற தனி ஒளி அளவைக் கொண்டுள்ள கதிரவன், ஏறக்குறைய பால் வழியில் உள்ள 85% விண்மீன்களை விட ஒளிர்வுமிக்கதாகும். அந்த விண்மீன்களில் பெரும்பாலனாவை செங்குறுமீன்கள் ஆகும். கதிரவன் ஒரு உலோகச்செறிவு மிக்க விண்மீன் வகையைச்சார்ந்தது


     நான்கு உட்கோள்கள் அல்லது புவியொத்த கோள்கள் அடர்ந்த பாறைப்படலங்களாக உள்ளன. அவற்றில் இரு கோள்கள் தனித்தனி நிலவுகளைக் கொண்டுள்ளன. இவற்றுக்குக் கோள் வளையங்கள் கிடையாது

          இவை பெரும்பாலும் உயர் உருகுநிலை கொண்ட உலோகங்கள் அதாவது மணல்சத்து உப்புக்களை வெளிப்புறத்திலும் இரும்புநிக்கல் போன்ற உலோகங்களை மையப்பகுதியிலும் கொண்டுள்ளன. நான்கு கோள்களில் வெள்ளி, பூமி, செவ்வாய் ஆகிய மூன்றையும் கட்டுறுதியான வளிக்கோளங்கள் சூழ்ந்திருக்கினறன. இவற்றில் அழுத்தமான எரிமலை முகடுகளும் கட்டுமானக் கலையுடன் நேர்த்தியான மேல்பரப்பும் அமைந்துகிடக்கின்றன. அதில் பிளவுண்டபள்ளத் தாக்குகள் மற்றும் எரிமலைகள் உள்ளன

      உட்கோள் என்ற பெயரை தாழ்ந்த கோள் என்ற பெயருடன் குழப்பம் ஏற்படுத்திக்கொள்ளக் கூடாது. தாழ்ந்த கோள் எனப்படுபவை புவியைக் காட்டிலும் கதிரவனுக்கு அருகில் உள்ள புதன் மற்றும் வெள்ளி ஆகும்

 புதன்
 

Image result for புதன்          புதன் கதிரவனுக்கு மிக அருகில் உள்ள கோளும் கதிரவ அமைப்பில் உள்ள கோள்களில் மிகச்சிறியதும் ஆகும். இது கதிரவனிலிருந்து 0.4 வானியல் அலகு தொலைவில் உள்லது. இதற்கு இயற்கைத் துணைக்கோள்கள் கிடையாது. இது புவியமைப்பு அம்சங்களுக்காகப் பெயர் பெற்றதாகும். அழுத்தமான எரிமலைவாய்களில் தொங்கும் கூடல் வாய்கள் அமைந்துள்ளன. அவைகள் ஒருவேளை கடல் தோன்றிய காலத்தில் நிகழ்ந்த ஒடுக்கத்தால் உருவாகியிருக்கக்கூடும். புதனின் வளிமண்டலம் புறக்கணிக்கத்தக்கதாகும். அதில் உள்ள அணுக்கள் மேற்பரப்பில் கதிரவன் காற்றால் தாக்கப்பட்டு வெடிக்கும். இது மையப்பகுதியில் இரும்பு உலோகம் அதிகமாக உள்ளது. அதன் மெல்லிய 'மூடகம்' பற்றி இதுவரை விளக்கப்படவில்லை. தற்காலிகக் கோட்பாடுகள்ன்படி, அதன் வெளிப்பகுதி அடுக்குகள் பெரும் பயன்விளைவால் முற்றிலும் களையப்பட்டுள்ளது அல்லது அது திரண்டு உருவாக்குவதை இளம் கதிரவனின் எரிசக்தி தடுத்து வந்துள்ளது.

< Previous Page                                                                     Next Page >

No comments :

Post a Comment