Sunday, 3 May 2020
சூரியக் குடும்பம்
4.6 பில்லியன் வருடங்களுக்கு முன்பு
ஒரு
மிகப்பெரிய மூலக்கூறு மேகத்தில் ஏற்பட்ட ஈர்ப்புவிசைச் சுருக்கம் காரணமாக கதிரவ
அமைப்பு உருவானது. இந்த
அமைப்பின் எடையில் பெரும்பகுதியைக் கதிரவனே கொண்டுள்ளது. அதற்கடுத்து மிக
அதிக
எடை
கொண்டது வியாழன் கோளாகும். புதன்,
வெள்ளி,
புவி
மற்றும் செவ்வாய் ஆகிய
நான்கு
உட்கோள்கள், புவியொத்த கோள்கள் என்று
அழைக்கப்படுகின்றன. இவை
பொதுவாகப் பாறைகள் மற்றும் உலோகங்கள் ஆகியவற்றால் உருவானவையாகும். ஏனைய
நான்கு
புறக்கோள்களும் புவியொத்த கோள்களை விட
நிறைமிக்கனவாகும். அவற்றில் மிகப்பெரிய கோள்களான வியாழன் மற்றும் சனி
போன்றவை பெரும்பாலும் ஐதரசன்
மற்றும் ஈலியம்
ஆகியவற்றைக் கொண்டுள்ளதால் வளிமப்
பெருங்கோள்கள் என்றும் யுரேனஸ் மற்றும் நெப்டியூன் போன்றவை மீதேன்,
அமோனியா போன்ற
உயர்
உருகு
நிலை
கொண்ட
பொருட்களைக் கொண்டுள்ளதால் பனிப
பெருங்கோள்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. அனைத்தும் தனித்தனி நீள்வட்ட சுற்றுப்பாதைகளில் (Orbital path) கதிரவனைச் சுற்றிவருகின்றன.
சூரியக் குடும்பத்தில் எட்டுக் கோள்கள் உள்ளன.
இவற்றில் வியாழன்தான் மிகப்பெரிய கோளாகும். இது
318 மடங்கு
புவிப்பொருண்மையக் கொண்டுள்ளது. இவற்றில் புதன்
எனும்
அறிவன்
கோள்தான் மிகவும் சிறிய
கோளாகும். இது
புவியைப் போல
0.055 பங்கு
பொருண்மையைக் கொண்டுள்ளது.
சூரியக் குடும்பக் கோள்களை அவற்றின் உள்ளியைபுக்கு ஏற்பக்
கீழ்வருமாறு பிரிக்கலாம்:
- புவிநிகர் கோள்கள்: இவை புவியைப் போன்றவை.இவற்றின் உட்கூறு பெரும்பாலும் பாறைகளால் ஆயதாகும். எ. கா. : புதன், வெள்ளி, புவி, செவ்வாய். புதன் மிகச்சிறிய புவிநிகர் கோள்ளாகும். இவ்வகைக் கோள்களில் புவி தான் மிகப் பெரியதாகும்.
- பெருங்கோள்கள் (வியாழன்நிகர் கோள்கள்): இவை புவிநிகர் கோள்களைவிட கணிசமான அளவு பெரியவை. எ. கா. : வியாழன், சனி, யுரேனசு, நெப்டியூன்.
- வளிமப் பெருங்கோள்கள் : வியாழனும் சனியும் நீரகமும் எல்லியமும் செறிந்த மிகப்பெரிய சூரியக் குடும்பக் கோள்களாகும். வியாழன் 318 புவிப் பொருண்மைகளும் சனி 95 புவிப் பொருண்மைகளும் கொண்டுள்ளன.
- பனிப்பெருங்கோள்கள்: யுரேனசிலும் நெப்டியூனிலும் நீர், மீத்தேன், அம்மோனியா போன்ற தாழ் கொதிநிலைப் பொருள்களும் தடிப்பான நீரக, எல்லிய வளிமண்டலங்களும் அமைந்துள்ளன. இவை வளிமப் பெருங்கோள்களைவிடக் குறைந்த பொருண்மையைக் (14, 17 மடங்கு புவிப் பொருண்மையைக்) கொண்டுள்ளன.
< Previous Page Next Page >
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment