சூரியக் குடும்பம்
வெள்ளி
வெள்ளி
என்பது அளவில் புவியை ஒத்திருக்கும் ஒரு கோளாகும் .
இது
கதிரவனிலிருந்து 0.7
வானியல் அலகு தூரத்திலுள்ளது .
இது
புவியைப்போல் இரும்பு மையத்தைச் சுற்றி பருமனான மணல் சத்து (
சிலிகேட் )
மூடகத்தைக் கொண்டுள்ளது .
இது புவியை விட
வறண்டும் ஒன்பது மடங்குகள் அடர்த்தியான வளிமண்டலத்தையும் கொண்டுள்ளது .
இதற்கு இயற்கை துணைக்கோள்கள் கிடையாது .
இது மிகமிக வெப்பமான
கிரகமாகும் .
இதன் மேற்பரப்பு வெப்பநிலை
400 °
செல்சியசை எளிதில் அடைந்துவிடக்கூடியது .
இதற்கு அதன் வளிமண்டலத்தில் பைங்குடில்
வளிமங்கள் அதிகமாக இருப்பதே காரணமாகும் .
நடப்பு மண்ணியல் நடவடிக்கைகள் அங்கு புவியியல் நடைபெறுவதற்குரிய உறுதியான தடயங்கள் ஏதும் கிடைக்கப் பெறவில்லை .
அதன் வளிமண்டலம் வெறுமையாகாமல்
தடுக்க அதற்கு காந்தப்புலம் எதுவும் இல்லை .
எனவே அதன் வளிமண்டலம்
எரிமலை வெளியேற்றங்களால் தொடர்ந்து நிரப்பப்படுகிறது .
புவி
புவி
உட்கோள்களில் மிகப்பெரியதும் மிக அடர்த்தியானதும் ஆகும் .
இதில் மட்டுமே புவியியல் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன .
அண்டத்தில் புவி ஒன்றில் மட்டும்
தான் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன புவியொத்த கோள்களில் இது ஒன்றுதான் திரவ
நீர்க்கோளம் பெற்றுள்ளது .
இத்தனிச்சிறப்பு இதற்கு மட்டுமே இருக்கின்றது .
மேலும் புவியில் காணப்படும் '
ண்டத்தட்டு '
இயக்கவியல் அதன் தனிச்சிறப்பைக் கூடுதலாக்குகின்றது .
புவியின் வளிமண்டலம் மற்ற கோள்களின் வளிமண்டலங்களைக்
காட்டிலும் வேறுபாடாக உள்ளது .
உயிரினங்கள் வாழத் தேவையான 21
சதவீதம் ஆக்சிசனைக் கொண்டிருப்பதால் இத்தகைய வேறுபாடுகள் தோன்றியுள்ளன . அதற்கு
நிலவு என்ற ஒரேயொரு இயற்கை
துணைக்கோள் உண்டு .
அந்த நிலவே கதிரவ
அமைப்பில் அமைந்துள்ள புவியொத்த கோள்களின் துணைக்கோள்களில் பெரியது எனப் பெயர் பெற்றுள்ளது .
More About Earth >>
No comments :
Post a Comment