Sunday, 3 May 2020
பேரண்டத்தின் அமைப்பு
கோள்
கோள் (planet) விண்மீனைச் சுற்றிவரும் வான்பொருளாகும் இது.
- தனது ஈர்ப்பு விசையாலுருண்டையாகத் திரளத் தக்க அளவு பொருண்மை மிக்கதாகும்;
- வெப்ப அணுக்கருப் பிணைவு நிகழ்வை உருவாக்க இயலாத அளவு பொருண்மை கொண்டதாகும்;
- மேலும் இது தன் வட்டணையின் வட்டாரத்தில் கோளெச்சம் ஏதும் அமையாமல் நீக்கியிருக்கவேண்டும்.
கோள்
எனும்
சொல்
வரலாறு,
கணியவியல், அறிவியல், தொன்மவியல், சமயம்
சார்ந்த பண்டைய
சொல்லாகும். சூரியக் குடும்பத்தில் உள்ள
பல
கோள்களை வெற்றுக் கண்ணால் பார்க்கலாம். இவை
பல
பண்டைய
நாகரிகங்களால் தெய்வீகத் தன்மையோடும் தெய்வங்களால் அனுப்பப்பட்டனவாகவும் உணரப்பட்டன. அறிவியல் அறிவு
வளர்ந்ததும், கோள்கள் பற்றிய
கண்ணோட்டம் மாறலானது. பன்னாட்டு வானியல் ஒன்றியம் 2006 ஆம்
ஆண்டில் சூரியக் குடும்பக் கோள்களுக்கான ஒரு
தீர்மானத்தைக் கொண்டுவந்தது. இந்த
வரையறை
எங்கு,
எவற்றை
வட்டணையில் சுற்றிவருகின்றன என்பதைப் பொறுத்து கோல்பொருண்மை உடைய
பல
வான்பொருள்களைத் தவிர்க்கிறது. இக்கால
வரையறைப்படி, 1950 க்கு முன்பு
கண்டுபிடித்த எட்டு
கோள்கள் மட்டுமே கோள்களாகக் கருதப்படுகின்றன; இந்த
வரையறையின்கீழ் சீரெசு,
பல்லாசு, யூனோ,
வெசுட்டா (குறுங்கோள்பட்டையில் உள்ள
வான்பொருள்கள்), புளூட்டோ (முதல்
நெப்டியூனுக்கு அப்பால் கண்டறிந்த கோள்)
ஆகியவை
முன்பு
கோள்களாகக் கருதப்பட்டு வந்திருந்தாலும், இப்போதும் இனியும் அவ்வாறு கருதப்படவியலாது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment