#விவசாயம் என்பது தொழிலும் அல்ல கலாச்சாரமும் அல்ல. விவசாயம் என்பது வாழ்வியல் #save_jallikattu

Powered by Blogger.

Sunday, 3 May 2020

பேரண்டத்தின் அமைப்பு

No comments :

நெபுலா


Image result for நெபுலாசூரியக் குடும்பதிற்கு அப்பால், தூசு, ஐதரசன், ஹீலியம் மற்றும் ஏற்றமடைந்த வாயுக்களால் ஆன திரளான முகிலே நெபுலா (Nebula) ஆகும். நெபுலா என்ற லத்தின் சொல்லுக்கு பனிமூட்டம் அல்லது புகை என்று பொருள். முதன்முதலாக சிறிய தொலைநோக்கிகளின் மூலம் விஞ்ஞானிகள் வானத்தைப் பார்க்க தொடங்கியபோது ஒளியுடன்ன கூடய புகை போன்ற அமைப்புகளை கண்டார்கள். வழமையாக நெபுலாக்களில் புதிய பல நட்சத்திரங்கள் உருவாகும். உதாரணமாகக் கழுகு நெபுலாவைக் குறிப்பிடலாம். இப்படியான அண்டவெளி முகில்களில் உள்ள வாயுக்கள் ஈர்ப்பால் ஒன்றிணைந்து நட்சத்திரங்களை உருவாக்குகின்றன. விண்மீன்களாக உருவாகாத மீதி முகில் பிரதேசங்கள் விண்மீன்களின் ஈர்ப்பால் ஒன்றிணைந்து கோள்கள் உருவாகின்றன.

பால் வழி

Image result for பால் வழிபால் வழி என்பது நம் கதிரவ மண்டலத்தை உள்ளடக்கிய ஒரு விண்மீன் பேரடை ஆகும். புவியில் இருந்து தென்படும் இதன் தோற்றம் காரணமாக பால் என்ற பெயரடை ஏற்பட்டது. அதாவது, வெற்றுக் கண்ணால் பார்க்கும்போது அவற்றில் இருக்கும் விண்மீன்களை தனித்தனியாக வேறுபடுத்திக் காண இயலாது என்பதால் அது இரவு வானில் ஒரு வெண் ஒளிர் பட்டை போன்று தோற்றமளிக்கும். பால் வழி எனும் சொல் இலத்தின் மொழிச் சொல்லான via lactea என்பதன் மொழிப்பெயர்ப்பு ஆகும். இது கிரேக்க மொழிச் சொல்லான γαλαξίας κύκλος (galaxías kýklos, பொருள்: பால் வட்டம்) என்பதில் இருந்து பெறப்பட்டதாகும். பால் வழியின் வட்டு வடிவ அமைப்பை அதன் உள்ளிருக்கும் புவியிலிருந்து நோக்குவதால் அது பட்டையாகத் தோற்றமளிக்கிறது. கலீலியோ கலிலி 1610 ஆம் ஆண்டில் தன் தொலைநோக்கியைக் கொண்டு அந்த ஒளிர் பட்டையை தனித்தனி விண்மீன்களாகப் பிரித்து நோக்கினார். 1920ஆம் ஆண்டு வரை, பெரும்பாலான வானியலாளர்கள் பால் வழியில் அண்டத்தின் அனைத்து விண்மீன்களும் அடங்கியுள்ளதாகக் கருதி வந்தனர். 1920ஆம் ஆண்டு ஆர்லோவ் சேப்ளே மற்றும் ஏபெர் கர்டிசு ஆகிய இரு வானியலாளர்கள் இடையே நடந்த பெருவிவாதத்தைத் தொடர்ந்து. எட்வின் ஹபிள் என்பவரின் நோக்கீடுகள் பால் வழி என்பது அண்டத்தில் உள்ள பல பேரடைகளில் ஒன்றே என்று காண்பித்தது.. 


பால் வழி என்பது 150,000 முதல் 200,000 ஒளியாண்டுகள் வரை விட்டம் கொண்ட ஒரு பட்டைச் சுருள் பேரடையாகும். இது 100–400 பில்லியன் விண்மீன்களைக் கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதில் குறைந்தபட்சம் 100 பில்லியன் கோள்கள் இருக்க வாய்ப்புள்ளது. கதிரவ மண்டலம், பால்வெளி மையத்தில் இருந்து 26,490 (± 100) ஒளியாண்டுகள் தொலைவில், வாயு மற்றும் தூசி ஆகியவற்றின் சுழல் வடிவ செறிவுகளில் ஒன்றான ஓரியன் சுருள்கையின் உள்விளிம்பில் அமைந்துள்ளது. உட்புறத்தில் தோராயமாக 10,000 ஒளியாண்டுகள் வரையில் அமைந்துள்ள விண்மீன்கள் ஒரு வீக்கத்தை உருவாக்குகின்றன. அந்த வீக்கத்தில் இருந்து ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட பட்டைகள் கதிர்வீச்சடைகின்றன. பால்வெளி மையத்தில் தனுசு * என்று அழைக்கப்படும் செறிந்த கதிர்வீச்சுள்ள மூலம் அமைந்துள்ளது; அது 4.100 (± 0.034) மில்லியனுக்கும் அதிகமான கதிரவ பொருண்மையைக் கொண்ட ஒரு மீப்பெரும் கருந்துளையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
விண்மீன்களும் வளிமங்களும் பால்வெளி மைய சுற்றுப்பாதையில் இருந்து பரந்த தொலைவில் தோராயமாக நொடிக்கு 220 கிலோமீட்டர்கள் வேகத்தில் சுற்றிவருகின்றன. இந்த நிலையான வேகம் கெப்லரின் இயங்கியல் விதிகளுக்குப் புறம்பானதாகும். இதனால் பால் வழிப் பொருண்மையின் பெரும்பகுதி மின்காந்தக் கதிவீச்சை உட்கவர்வதோ வெளியிடுவதோ இல்லை என்பது தெளிவாகிறது. இந்தப் பொருண்மை கரும்பொருள் என்று குறிப்பிடப்படுகிறது. கதிரவனின் இருப்பில் பால் வழியின் சுழற்சி நேரம் 240 மில்லியன் ஆண்டுகள் ஆகும். புறப்பால்வெளிச் சட்டகத்தைச் சார்ந்து நம் பால் வழி தோராயமாக நொடிக்கு 600 கிமீ வேகத்தில் சுற்றுகிறது. இதில் உள்ள அகவை முதிர்ந்த விண்மீன்கள் அண்டத்தின் அகவைக்குச் சம அகவையைப் பெற்றுள்ளன. எனவே இது பெருவெடிப்பின் இருட்காலங்களுக்குப் பிறகு உடனே உருவானதாகும் என்று புலப்படுகிறது.


< Previous Page                                                                                                         Next Page >

No comments :

Post a Comment