Sunday, 3 May 2020
பேரண்டத்தின் அமைப்பு
பேரண்டத்தில் புவியின் அமைவிடம் (Earth's location in the universe) குறித்து 400 ஆண்டுகளாகவே ஆராயப்பட்டு வருகின்றது. குறிப்பாக 20ஆம் நூற்றாண்டில் இவ்வாராய்ச்சி எழுச்சி பெற்றதென கொள்ளலாம். முதலில் மானிடர்கள் புவியை மையமாக வைத்தே அண்டம் அமைந்திருந்ததெனக் கருதினர். 17ஆம் நூற்றாண்டில் சூரியனே மையமென்ற கொள்கை வலுப்பெற்ற பிறகு புவி இவ்வண்டத்தில் மிகக்குறுகிய இடத்தையே ஆக்கிரமித்திருப்பது அறியப்பட்டது. 20ஆம் நூற்றாண்டில் நெபுலாக்கள் நன்கு ஆராயப்பட்ட பிறகு இவ்விரிவடையும் அண்டத்தில் புவி அமைந்துள்ள பால் வழி போல் 100 கோடிக்கும் மேற்பட்ட விண்மீன் பேரடைகள் உள்ளது அறியப்பட்டது. மானிடரால் காட்சிக்குட்படுகிற பேரண்டத்தின் அளவு விரிவடைய விரிவடைய விண்மீன் கொத்துகள், மீகொத்து தொகுப்புகள் என இவ்வண்டத்திலுள்ள தொகுப்புகள் வகைப்படுத்தப்பட்டன. அதன்படி ஒரு கோளையோ அல்லது விண்மீனின் அமைவிடத்தையோ கூற வானியலார் விண்மீன் பேரடைகள், விண்மீன் கொத்துகள், மீகொத்து தொகுப்புகள் போன்ற வரையறைகளை உருவாக்கினர்.

இடமிருந்து வலமாக
புவி,
சூரிய
மண்டலம், சூரிய
மண்டல
துணைக்குழு, பால்
வழி,
உட்
குழு,
கன்னி
விண்மீன் மீகொத்து, திமிங்கல-மீனம்
மீகொத்து தொகுப்பு, காட்சிக்குட்பட்ட பேரண்டம்.(பெரிய படிமத்துக்கு இங்கே சொடுக்குங்கள்.)
அண்டம்
அண்டம் என்பது
நம்மைச் சுற்றியுள்ள எல்லாவற்றையும் குறிக்கின்ற ஒரு
சொல்லாகும். பூமி,
நிலவு,
வானம்,
சூரியன், சூரியனைச் சுற்றி
வரும்
கோள்கள், விண்மீன்கள், விண்மீன்களுக்கு இடையுள்ள விண்
துகள்கள் (cosmic dust), அவற்றின் இயக்கம், இவற்றை
எல்லாம் சூழ்ந்துள்ள வெட்ட
வெளி
(empty space), கண்ணுக்குத் தெரியாத தொலைவில் உள்ள
விண்மீன்களுக்கும் அப்பால் உள்ள
விண்மீன் குழுக்கள் (galaxy) ஆகியன அனைத்தும் அண்டம்
என்ற
சொல்லில் அடங்கும். இத்துடன் காலம்
என்ற
கருத்தும் அது
தொடர்பான முறைமைகளும் (laws) இதில் அடங்கும். ஒரு
புதிய
ஆய்வு,
அண்டம்
வாழ்க்கைக்கு ஏற்ற
நிலையைப்பெற தேவையான அளவு
வேகமாக
விரிவடைந்து வருவதை
உறுதிசெய்கிறது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment