Sunday, 3 May 2020
பூமி
நீர்க்கோளம்
பெருங்கடல்களின் சராசரி நிறை 1.35×1018 மெட்ரிக் டன்கள், அல்லது பூமியின் மொத்த நிறையில் 1/4400, மற்றும் 1.386×109கிமீ3 கனஅளவு இடத்தைப் பிடித்துள்ளது. பூமியின் நிலப்பரப்பு முழுவதும் சமமாக பரவியிருக்குமானால் நீரின் மட்டம் நிலத்தின் மீது 2.7 கி.மீ. உயர்ந்து
இருக்கும். மொத்த நீரில் 97.5% உப்பு நீராகும் மற்ற 2.5% தூய நீராகும். இதில்
பெரும்பான்மையான தூயநீர், அதாவது 68.7% தற்போது பனிக்கட்டிகளாக உள்ளது.
பெருங்கடல்களின் மொத்த நிறையில் 3.5% உப்பாலானது. இந்த உப்பானது எரிமலை
நிகழ்வுகளாலும் மற்றும் குளிர்ந்த தீப்பாறைகளிலிருந்தும் வெளிப்பட்டதாகும். வளிமண்டலத்திலுள்ள பல வாயுக்கள் பெருங்கடலில்
கரைந்து அதில் வாழும் உயிரினங்களுக்கு ஆதாரமாய் உள்ளது. கடல் நீர் உலகின்
பெரிய வெப்ப தேக்கமாக செயல்படுவதால் புவியின் வானிலையில் முக்கிய அங்கம் வகிக்கின்றது. பெருங்கடல்களில் வெப்பப் பங்கீட்டில் மாற்றம் நேரும் போது குறிப்பிடும் வகையில்
வானிலை மாற்றங்கள் ஏற்படுவதால் எல் நினோ தெற்கு
திசை ஊசலாட்டம் (ElNiño – Southern
Oscillation) போன்றவை
ஏற்படும்.
வளிமண்டலம்
புவியின் உயிர்கோளம் வளிமண்டலத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.
வானிலை மற்றும் பருவ நிலை
முதன்மை வளிமண்டல சுழற்சியின் தடத்தில் நிலநடுக்கோட்டிலிருந்து 30° பாகைகள் உருவாகும் வியாபாரக் காற்றுகள் மற்றும் மேற்கத்திய காற்றுகள் இவை மத்திய-நில
நேர்ககோட்டில் 30° மற்றும் 60° பாகைக்குள் உருவாகின்றன.[92] பெருங்கடல்களின்
ஓட்டமும் வானிலை மாற்றத்தில் பெரும் பங்கு வகிக்கின்றன, முக்கியமாக வெப்ப ஹேலைன் சுழற்சி பூமத்திய கடல்களில் இருந்து துருவக்கடல்களுக்கு வெப்ப ஆற்றலைப் பரப்புகிறது.
வளிமண்டலத்தின் நிலை அனுமதிக்கும் போது
சூடான ஈரப்பதம் மிக்க காற்று மேலெழும்பி, பிறகு குளிர்ந்து, மழையாகி, பூமியை அடைகின்றது.[91] இது
பெரும்பாலும் ஆற்றின் மூலமாக பெருங்கடல் அல்லது ஏரிகளை சென்றடைகிறது இந்நீரின் சுழற்சி பூமியில் உயிரினங்கள் வாழ மிக முக்கியமானது
மற்றும் வெகு காலமாக ஏற்பட்டுக்கொண்டிருக்கும்
புவியின் மேற்புற அமைப்புகளின் அரிப்புகளுக்கும் காரணமாகின்றது. மழை பொழிவது இடத்திற்கு
இடம் வெகுவாக வேறுபடுகின்றது, அது பல மீட்டரில்
இருந்து சில மில்லி மீட்டர்
வரை மாறுபடுகின்றது. ஒவ்வொரு இடத்திலும் காணப்படும் வளிமண்டல சுழற்சி, மேற்புற அமைப்பு மற்றும் வெப்ப மாற்றத்தை பொறுத்தே அவ்விடத்து மழை அமையும்.
பூமியின் பகுதிகளை அதன் நில நேர்க்கோட்டின்
படி சராசரியான ஒரே தட்பவெப்ப நிலைகள்
உள்ளவைகளாக பிரிக்கலாம். பூமத்திய ரேகையிலிருந்து துருவங்கள் வரையிலான தட்பவெப்பத்தை வெப்ப வளையம் (அல்லது ஈக்வடோரியல்), மிதவெப்ப வளையம், மிதமான வளையம் மற்றும் துருவ வளைய தட்பவெப்பம் என
பிரிக்கலாம். தட்பவெப்பத்தை
வெப்பம் மற்றும் பெய்யும் மழையைக்கொண்டும் வகைப்படுத்தலாம், அதாவது அவ்வவ்விடத்தின் சீரான காற்றின் அடர்த்தியைக் கொண்டும் பிரிக்கலாம். பொதுவாக உபயோகத்தில் உள்ள கோப்பெனின் தட்பவெப்ப
முறையின் படி (விளாடிமிர் கோப்பெனின்
மாணாக்கர் ருடால்ப் கைகர் மாற்றியமைத்தது) தட்பவெப்பங்களை ஐந்து பெரும் பிரிவுகளாக (ஈரப்பதம் மிக்க வெப்ப பகுதி, வறண்ட பகுதிகள், ஈரப்பதம் மிக்க மத்திய நில நேர்க்கோட்டு பகுதிகள்,
மிதமான குளிர் பகுதிகள் மற்றும் மிகக்குளிர் துருவ பகுதிகள்) பிரித்துள்ளார், மேலும் இவை குறிப்பிட்ட உட்பிரிவுகளாகவும்
பிரிக்கப்பட்டுள்ளன.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment